நான் கிழக்கு மாகாணத்தையோ, அதன் முதலமைச்சரையோ ஏற்றுக்கொள்ளவில்லை –கூறியவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்.


கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 10 ந்திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் திரு ரணில் விக்கிரமசிங்கா அவர்களுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தினை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் நோக்குடன் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஜனாப் ரவூப் ஹக்கீம் அவர்களையும் தம்முடன் இணைத்துக்கொண்டு தோதலில் களமிறங்கியவர்கள்தான் மேற்கூறிய முக்கூட்டணியினர். ஆனால் அவர்களின் தேர்தல் வியூகம் தோல்வியைத் தழுவியதன் காரணமாக மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியினரால் கைப்பற்றப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் திரு சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சராக (16.05.2008ல்) பதவியேற்றார். Read the rest of this entry →

26

01 2012

ஜனாதிபதியின் 2வது பதவிக் காலத்தின் ஈராண்டு பூர்த்தி:பாரிய பொருளாதார வளர்ச்சி; தலா வருமானம் அதிகரிப்பு இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு முதல் தடவையாக பில்லியன். டொலர்களால் அதிகரிப்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.இந்த வருடத்தில் இலங்கையின் தலா வருமானம் 2 ஆயிரம் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருப்பதுடன், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry →

26

01 2012

கறுப்பு ஜனவரி’ போராட்டத்தை எதிர்த்து கோட்டையில் பேரணி ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கவாதிகள், ஆயிரக்கணக்கில் பங்கேற்பு


கறுப்பு ஜனவரி’ ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஊடகவியலாளர்கள், தொழிற் சங்கவாதிகள், பொதுமக்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.நாட்டில் ஊடக சுதந்திரம் பறிக் கப்பட்டுள்ளதாகவும், கொலை, ஆட்கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் இடம் பெறுவதாகவும் கூறி சுதந்திர ஊடக அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஒழுங்கு செய்திருந்தது Read the rest of this entry →

26

01 2012

முதலமைச்சரின் கடிதமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறையும். ஆரோக்கியமானதொரு விவாதத்திற்காக…


தமிழ் காங்கிரஷ் , தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற வரலாற்றுத் தொடர்ச்சியின் இன்றைய வடிவமே தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். பிரபல மேதாவி பொன் அருணாச்சலம் தொடங்கி அமிர்தலிங்கம் வரையிலான மிகப்பெரும் தலைமைகள் வழிநடாத்திய அரசியலையே இன்றைய தமிழ் கூட்டமைப்பும் அதன் தலைமையும் பிரதிபலிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூட ஐம்பது வருட அரசியல் அனுபவம் மிக்க பழுத்த அரசியல்வாதி என்று போற்றப்படுகின்றார். தலைமை என்பது வல்லமை வாய்ந்ததாக இருப்பது மட்டும் அல்ல நல்லெண்ணம் கொண்டதாகவும் இருப்பது அவசியம். ஏனெனில் ஒரு மக்கள் கூட்டத்தை, ஒரு இனத்தை, ஏன் ஒரு நாட்டினையே வழிநடத்தும் பொறுப்பினை இந்த அரசியல் தலைமைகளே கையகப்படுத்தி இருக்கின்றனர். அப்படியானதொரு பொறுப்பு வாய்ந்த ஷ்தானத்தில் அமர்ந்திருப்பவர்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனாகும். Read the rest of this entry →

25

01 2012

மூன்று இலட்சம் தமிழ் மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியவர்கள் புலிகள் எஸ். அருளானந்தம்.. முன்னாள் பிரதம ஆசிரியர் தினகரன்


1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி. சுமார் அறுநூறு வருடகால வரலாற்றைக் கொண்ட யாழ்ப்பாண நகரம் என்று மில்லாதவாறு அன்று வெற்றிச்சோடிக் காணப்பட்டது. வீடுகளுக்குள்ளும் மக்கள் இல்லை. வீதிகளிலும் மக்கள் இல்லை. புலிகள் இயக்கத்தினர் விடுத்த கடுமையான எச்சரிக்கை மற்றும் மிரட்டல், தாக்குதல் ஆகிய வற்றையடுத்து சுமார் மூன்று இலட்சம் மக்கள் யாழ். நகரத்தைவிட்டு வெளியேறியிருந்தனர்; வெளியேற்றப்பட்டனர். ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் போன்ற வளர்ப்பு மிருகங்களையெல்லாம் அப்படி அப்படியே விட்டுவிட்டு மக்கள் வெளியேறிவிட்டனர் Read the rest of this entry →

24

01 2012

தமிழர்களின் நலன் கருதி தூரநோக்குடன் செயற்பட வேண்டும்


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் 01.01.2012ம் திகதி இடப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்மந்தன் அவர்களுக்கு எழுதிய மடலுக்கு இன்று வரை அவரால் பதில் வழங்க முடியவில்லை என்றால் எப்படி தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை தீர்க்க முன்வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு சபை அமர்வுகளிலும் மற்றும் மத்திய அரசிடமும் 13வது திருத்தச் சட்டத்தின் காணி காவல் துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் மாற்று கருத்து இல்லாமல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், அதன் தலைமையும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கோரிய வண்ணமே உள்ளோம். Read the rest of this entry →

24

01 2012

அரியநேந்திரனின் அரசியல் பிரவேசத்திற்கு முன்னரே அதிகாரத்திற்காக போராடியவர் பிள்ளையான்


கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 01.01.2012 அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களுக்கு பகிரங்க மடல் ஒன்றினை அனுப்பி இருந்தார். அதன் சாராம்சம் வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த ஏனைய அதிகாரங்கள் தொடர்பில் தான் பேசத் தயார் என்பதே அதுவாகும்.இன்றைய(24.01.2012) தகவல்களின்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலமைச்சர் சந்திரகாந்தனின் கடித்திற்கு சாதகமான பதிலை ஓரிரு தினங்களில் அனுப்பி இரா சம்பந்தனுக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்றும் இடம்பெற உள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன Read the rest of this entry →

24

01 2012

மூன்று இலட்சம் தமிழ் மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியவர்கள் புலிகள் எஸ். அருளானந்தம்.. முன்னாள் பிரதம ஆசிரியர் தினகரன்


1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி. சுமார் அறுநூறு வருடகால வரலாற்றைக் கொண்ட யாழ்ப்பாண நகரம் என்று மில்லாதவாறு அன்று வெற்றிச்சோடிக் காணப்பட்டது. வீடுகளுக்குள்ளும் மக்கள் இல்லை. வீதிகளிலும் மக்கள் இல்லை. புலிகள் இயக்கத்தினர் விடுத்த கடுமையான எச்சரிக்கை மற்றும் மிரட்டல், தாக்குதல் ஆகிய வற்றையடுத்து சுமார் மூன்று இலட்சம் மக்கள் யாழ். நகரத்தைவிட்டு வெளியேறியிருந்தனர்; வெளியேற்றப்பட்டனர். ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் போன்ற வளர்ப்பு மிருகங்களையெல்லாம் அப்படி அப்படியே விட்டுவிட்டு மக்கள் வெளியேறிவிட்டனர். Read the rest of this entry →

24

01 2012

அப்துல் கலாமுக்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு அலைகடலென பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம்; யாழ்.இந்துவிலும் வைபவம்


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதலில் வட மாகாண ஆளுநர் மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோர் கலந்து கொண்டனர் Read the rest of this entry →

24

01 2012

டொலருக்கு விலை போனோர் நாட்டுக்கு எதிராக சதி எதற்கும் முகம் கொடுக்க அரசு தயார்


ஜனநாயக ரீதியாக நடத்தப்பட்ட தேர்தல்களில் தோல்வியுற்று, அரசியல் ரீதியாக ஒரு ஸ்தானத்துக்கு வரமுடியாத குழுவினரும், டொலர்களுக்கு விலைபோனவர்களும் மக்கள் போராட்டம் என்ற பெயரில் எந்தவிதமான காரணங்களுமின்றி நாட்டுக்கு எதிராக சதிமுயற்சிகளை மேற்கொள்வதற்கு முயற்சிப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் சதி முயற்சிகளுக்கு முகம்கொடுக்க அரசாங்கம் தயாராகவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். Read the rest of this entry →

24

01 2012

வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகார விடயங்களிலும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றார்.


தற்போது மிகவும் ஓர் சுவாரசியமான செய்தி ஒன்று புலி ஆதரவாளர்களின் இலத்திரனியல் ஊடகங்களில வெளியாகி இருக்கிறது. அதாவது கிழக்கு மாகாண சபையினை நேரடியாக நிர்வகிக்கின்றவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை வழிநடாத்துகின்றவருமான பிள்ளiயான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா சம்பந்தன் அவர்களுக்கு புதிய ஆண்டின் முதல் நாளிலே ஓர் பகிரங்க மடலை எழுதி இருந்தார். Read the rest of this entry →

23

01 2012

கடித உறைகளை அன்பளிப்புச் செய்து வங்குறோத்து அரசியல் செய்யும் வெட்கம் கெட்ட மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா!


ஏமாறுபவர்கள் வாழும்வரை ஏமாற்றுபவர்களின் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுவது பண மழையே! நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளைக் கிராமத்தில் இருக்கின்ற திருஞானசம்பந்தர் குருகுலத்தில் குருகுல நிர்வாகசபை அங்கத்தவர்களுக்கான பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இப் பொதுக்கூட்டத்திற்கு வந்தவர்கள் பலர் இக்குருகுலத்தின் நிர்வாக சபையின் தேவையற்ற செயற்பாடுகள் தொடர்பாக விமர்சித்ததுடன். ஒரு சிலரின் சுய நலத்திற்காக சமூக நோக்கத்துடன் செயற்படும் குருகுலத்தை அரசியலிற்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார் Read the rest of this entry →

22

01 2012

வெற்றிகரமான அகழ்வாராய்ச்சியாகும்


கெய்ன் லங்கா நிறுவனம் இலங்கையில் மேற்கொண்ட எண்ணெய் அகழ்வுப் பணிகள் மிகவும் வெற்றிகரமான செயற்பாடாக அமைந்துள்ளது. கெய்ன் லங்கா நிறுவனத்தால் மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் பலனாக இரண்டு இயற்கை எரிவாயு கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இலங்கையின் நீண்டநாள் கனவாக இருந்த எரிபொருள் வளம் தொடர்பான நம்பிக்கையும் அதன் காரணமாக துளிர்விட ஆரம்பித்தது Read the rest of this entry →

20

01 2012

இறுதித் தீர்வு சகல இனங்களினதும் அபிலாஷைகளை பிரதிபலிக்க வேண்டும் கிளிநொச்சியில் அமைச்சர் றிசாத்


சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய, சகல சமூகங்களின் அபிலாஷைகள் பிரதிபலிக்கக்கூடிய இறுதித் தீர்வே காலத்தின் தேவையென வலியுறுத்தியுள்ள கைத்தொழில் வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு அமையும்போது இந்த நாட்டில் எந்த பிரச்சினையும் தோன்றாது என்றும் கூறினார்.கிளிநொச்சி சிவபாத கலையக அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கான கட்டடத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். Read the rest of this entry →

20

01 2012

13வது திருத்தத்துக்கு அப்பால் தீர்வு மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்குமிடையே ‘செனட்சபை’ அதிகாரப் பகிர்வுக்கு புதிய யோசனை


தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் செனட்சபையை உருவாக்கி அதன் ஊடாக மாகாண சபைகளுக்கும், மத்திய அரசாங்கத்துக்கும் இடையில் நெருக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். Read the rest of this entry →

20

01 2012